மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே, லாரி மீது கார் மோதல்; டிரைவர் பலி + "||" + Near Ulundurpet, Car collision on truck; Driver Kills

உளுந்தூர்பேட்டை அருகே, லாரி மீது கார் மோதல்; டிரைவர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே, லாரி மீது கார் மோதல்; டிரைவர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
உளுந்தூர்பேட்டை,

அரியலூர் அருகே உள்ள செந்துறையை சேர்ந்த நாராயணசாமி என்பவருடைய மகன் ராமச்சந்திரன். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவதற்காக விமானத்தில் சென்னைக்கு நேற்று அதிகாலையில் வந்து சேர்ந்தார்.

அவரை அரியலூர் பள்ளக்காவேரியை சேர்ந்த வாடகை கார் டிரைவர் சிரஞ்சிவி(வயது24) காரில் அழைத்துக்கொண்டு அரியலூருக்கு புறப்பட்டார். உளுந்தூர்பேட்டை பைபாஸ் அருகே உள்ள அஜீஸ்நகர் பகுதியில் வந்த போது அந்த கார், முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி டிரைவர் சிரஞ்சிவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராமச்சந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிரஞ்சிவி உடல் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டதால் தீயணைப்பு படையினர் நிலைய அதிகாரி ஜமுனா ராணி தலைமையில் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிரஞ்சிவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரவாயல் அருகே அடுத்தடுத்து 3 லாரிகள் மோதல்; டிரைவர் பலி
மதுரவாயல் அருகே அடுத்தடுத்து 3 லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் தண்ணீர் லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
2. கோத்தகிரி அருகே, 150 அடி பள்ளத்தில் லாரி உருண்டு விழுந்து டிரைவர் பலி
கோத்தகிரி அருகே 150 அடி பள்ளத்தில் லாரி உருண்டு விழுந்து டிரைவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. குளச்சல் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலி - திருமணம் ஆன 10 மாதத்தில் பரிதாபம்
குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலியானார். திருமணம் ஆன 10 மாதத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
4. வேலூர் அருகே நின்றிருந்த வேன்மீது ஆட்டோ மோதி டிரைவர் பலி
வேலூர் அருகே நின்றிருந்த வேன் மீது ஆட்டோ மோதியதில் டிரைவர் பலியானார்.