மாவட்ட செய்திகள்

பள்ளி வளாகத்தில், மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல் + "||" + On the school premises, students should avoid using plastic materials, the Collector's instruction

பள்ளி வளாகத்தில், மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

பள்ளி வளாகத்தில், மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
பள்ளி வளாகத்தில், மாணவர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குடிநீர் அருந்துவதற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பள்ளிக்கு செல்லும் வழியில் சாலையோரங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தென்பட்டால் அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் மாணவர்கள் தங்கள் இல்லங்களில் பெற்றோர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும் அறிவுறுத்த வேண்டும். இதன்மூலம் ஒவ்வொரு பள்ளியும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இல்லா பள்ளி வளாகமாக செயல்பட வேண்டும். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளபடி பள்ளி வளாகத்தில் தண்ணீர் எந்த இடத்திலும் தேங்கி நிற்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டும்.


அறிவுரைகள் வழங்க வேண்டும்

திறந்தவெளி கிணறுகள் இருந்தால் இரும்புவலைகள் கொண்டு மூடி குழந்தைகள் அருகில் செல்லாத வகையில் பாதுகாக்கப்பட வேண்டும். இடியும் நிலையில் உள்ள கட்டிடங்கள் அருகில் மாணவர்கள் செல்லக்கூடாது. உடனடியாக அவற்றை இடித்து அகற்றிட வேண்டும். பள்ளிகளில் உள்ள கழிவறைகள் தினமும் அதற்குரிய பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். டெங்கு தொடர்பான அறி குறிகள் தென்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். மாணவர்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடக்க, ஆசிரியர்கள் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவரங்குளம் ஒன்றிய பகுதிகளில் வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைப்பு
திருவரங்குளம் ஒன்றிய பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
2. கரூர் உள்பட 4 ஒன்றியங்களில் இன்று முதல்கட்ட தேர்தல்: வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன
கரூர், தாந்தோணி உள்பட 4 ஒன்றியங்களில் இன்று முதல் கட்ட தேர்தலையொட்டி அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
3. நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் ரூ.15½ லட்சம் அபராதம் வசூல்
நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களிடம் இருந்து ரூ.15½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4. ஓசூரில் ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்; 3 பேர் கைது
ஓசூரில் ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. சேலத்தில், 2 கடைகளில் 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
சேலத்தில் 2 கடைகளில் 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.