மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் மாசு இல்லாத போகிப்பண்டிகை கொண்டாட கலெக்டர் வேண்டுகோள் + "||" + Pollution in the district Collector's request to celebrate absence

மாவட்டத்தில் மாசு இல்லாத போகிப்பண்டிகை கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்

மாவட்டத்தில் மாசு இல்லாத போகிப்பண்டிகை கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்
திருச்சி மாவட்டத்தில் மாசு இல்லாத போகிப்பண்டிகை கொண்டாட பொதுமக்களுக்கு, கலெக்டர் சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சி,

பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள் போகிப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அன்று வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.அதன்படி, நாளை மறுநாள்(ெசவ்வாய்க்கிழமை) போகிப்பண்டிகை ஆகும். அன்று மாசு இல்லாத போகிப்பண்டிகை கொண்டாட கேட்டுக்கொள்ளப்படுகிறது. பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, இதனால் வெளிப்படும் நச்சு வாயுக் களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்றவற்றால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.


வாகன ஓட்டிகள் சிரமம்

மேலும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக புகை அமைந்து விடுகிறது. எனவே, போகிப்பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தன்னம்பிக்கையோடு எழுதவேண்டும் கலெக்டர் ரத்னா பேச்சு
அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ- மாணவிகள் தன்னம்பிக்கையோடு எழுதவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ரத்னா கூறினார்.
2. வேலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
வேலூரில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
3. கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணம் புறப்பட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார்
உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்ட விவசாயிக போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையில் தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. அலகுமலையில் 2-ந் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டை கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் கலெக்டர் அறிவுரை
அலகுமலையில் 2-ந் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தினார்.
5. திருவாரூரில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவி தொகை கலெக்டர் வழங்கினார்
திருவாரூரில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் திருமண உதவி தொகையினை மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.