பொய்சர் ரசாயன ஆலை வெடி விபத்து: பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் - முதல்-மந்திரி அறிவிப்பு


பொய்சர் ரசாயன ஆலை வெடி விபத்து: பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் - முதல்-மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2020 11:30 PM GMT (Updated: 12 Jan 2020 6:58 PM GMT)

பொய்சர் ரசாயன ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

மும்பை, 

பால்கர் மாவட்டம் பொய்சர் கோல்வாடே பகுதியில் ‘அங் பார்மா' என்ற ரசாயன ஆலை உள்ளது. கட்டுமான பணிகள் நடந்து வந்த இந்த ஆலையில் நேற்று முன்தினம் இரவு தொழிலாளர்கள் சில ரசாயனங்களை சோதனைக்கு உட்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்த னர். அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற் பட்டது. இந்த விபத்தில் ஆலை தொழிலாளர்கள் 8 பேர் உடல் சிதறி பலியானார்கள்.

இந்த விபத்தில் மோகன் (வயது45), சாக்சி (39), நிசு (26), மாதுரி (46), கோகுல் (18), ஆலை காவலாளி இலியாஸ் அன்சாரி(45), திரிநாத் தசாரி(35), சிறுமி குஷி (13) ஆகிய 8 பேரின் உடல்களையும் தீயணைப்பு வீரா்கள் மீட்டுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த ஆலை உரிமையாளர் நத்வர்பாய் பட்டேல் உள்ளிட்ட 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வெடி விபத்தில் இடிந்த ஆலையில் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து பால்கர் மாவட்ட பொறுப்பு மந்திரி தாதா புசே கூறுகையில், ‘‘ரசாயன ஆலை உரிய அனுமதி பெற்று தான் ரசாயன சோதனையில் ஈடுபட்டு உள்ளது. எனினும் விபத்து நடந்த பகுதியில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள். அவர்களின் அறிக்கையை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார்.

இந்தநிலையில் ரசாயன ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

Next Story