மாவட்ட செய்திகள்

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போரை கண்டித்து பிராமணர் சங்கம் ஆர்ப்பாட்டம் + "||" + Condemning those who oppose citizenship law Brahmin Sangam demonstration

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போரை கண்டித்து பிராமணர் சங்கம் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போரை கண்டித்து பிராமணர் சங்கம் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போரை கண்டித்து பிராமணர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
சென்னை, 

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போரை கண்டித்து தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.ராமகிரு‌‌ஷ்ணன் தலைமை தாங்கினார். சங்கத்தின் பேச்சாளர்கள் திருமலைராஜகோபால், ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து எஸ்.ராமகிரு‌‌ஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வி‌‌ஷம பிரசாரங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. கம்யூனிஸ்டு கட்சிகளும், இந்து மத விரோதிகளும் பொய்யான பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் வாழும் முஸ்லிம்களும் இந்த சட்டத்தால் எந்த சிக்கலும் இல்லை. எனவே மத கலவரத்தை தூண்டி அதில் குளிர் காய நினைக்கும் சமூக விரோத சக்திகளுக்கு முஸ்லிம் சகோதரர்கள் துணைபோக கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த சட்டத்தை விரைவில் அமல்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசுக்கு வலியுறுத்துகிறோம். மேலும் இச்சட்டம் குறித்து வி‌‌ஷம பிரசாரத்தில் ஈடுபட்டு வருவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.