கர்நாடகத்திற்கு துரோகம் செய்யும் எடியூரப்பா; சித்தராமையா குற்றச்சாட்டு
கர்நாடகத்திற்கு எடியூரப்பா துரோகம் செய்வதாக சித்தராமையா குற்றம்சாட்டினார்.கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு,
பிரதமர் மோடி 15 அம்ச திட்டங்களுக்கு கர்நாடகத்திற்கு ரூ.5,335 கோடி நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். இதில் ரூ.911 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையால் மத்திய அரசு கர்நாடகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. வரி வருவாயில் பங்கு மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலம் கர்நாடகத்திற்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.73 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும்.
இந்த நிதியை கேட்டு பெற முதல்-மந்திரி எடியூரப்பாவால் முடியவில்லை. இதன் மூலம் அவர் கர்நாடகத்திற்கு துரோகம் செய்கிறார். எடியூரப்பாவின் பேச்சை பிரதமர் ேமாடியோ அல்லது உள்துறை மந்திரி அமித்ஷாவோ மதிப்பதே இல்லை. நிதி உதவி கேட்டு மனு கொடுக்கக்கூட அவருக்கு அனுமதி வழங்காமல் அவமதிக்கிறார்கள். எடியூரப்பா மீது உள்ள அவர்களின் கோபத்தால் கர்நாடகத்தின் நலன் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசிய பா.ஜனதாவை சேர்ந்த சோமசேகரரெட்டி எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அமைதி வழியில் போராட பல்லாரிக்கு சென்ற எங்கள் கட்சியை சேர்ந்த ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story