மாவட்ட செய்திகள்

சென்னை, கோவையில் இருந்து வந்த பஸ், ரெயில்களில் அலைமோதிய கூட்டம் + "||" + Hailing from Coimbatore, Chennai A wave of crowds on buses and trains

சென்னை, கோவையில் இருந்து வந்த பஸ், ரெயில்களில் அலைமோதிய கூட்டம்

சென்னை, கோவையில் இருந்து வந்த பஸ், ரெயில்களில் அலைமோதிய கூட்டம்
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை, கோவையில் இருந்து நெல்லை வந்த பஸ், ரெயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
நெல்லை, 

பொங்கல் பண்டிகையையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் வருகிற 19-ந் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் சென்னை, கோவை, திருப்பூர், சேலம், ஓசூர், செங்கல்பட்டு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் குடும்பத்துடன் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் அவர்கள் தங்களது சொந்த ஊரில் பொங்கலை கொண்டாட நேற்று முன்தினம் பள்ளி, கல்லூரிகள் முடிவடைந்த பிறகு மாலையில் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் அந்தந்த ஊர்களில் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நேற்று முன்தினம் இரவில் பஸ் மற்றும் ரெயில்களில் புறப்பட்டவர்கள் நேற்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் குடும்பம், குடும்பமாக வந்திறங்கினர். இதேபோல் வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகில் ஆம்னி பஸ்களிலும் ஏராளமானோர் வந்து இறங்கினர்.

நெல்லையில் இருந்து மீண்டும் பஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களில் ஏறி, தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் புறப்பட்ட சென்னை தாம்பரம்-நெல்லை அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று பகலில் புறப்பட்ட சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருச்சி-திருவனந்தபுரம் இண்டர் சிட்டி ரெயில்களில் ஏராளமான பயணிகள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வந்து இறங்கினர்.

இதேபோல் சென்னையில் இருந்து தென்காசிக்கு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், தூத்துக்குடி வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் ஏராளமானோர் வந்து இறங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிலாளர்களை அழைத்து வந்த கர்நாடக அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியது
தொழிலாளர்களை அழைத்து வந்த கர்நாடக அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியது 30 பேர் உயிர் தப்பினர்.
2. வெளிநாடுகளில் இருந்து வந்த 48 பேர் கண்காணிப்பு: பஸ், ஆட்டோக்களுக்கு தினமும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து வந்த 48 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பஸ், ஆட்டோக்களுக்கு தினமும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தினார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது.
3. ஈரோட்டில் பரபரப்பு மேம்பாலத்தில் அரசு பஸ் மோதியது கண்டக்டர் உள்பட 2 பேர் படுகாயம்
ஈரோட்டில் மேம்பாலத்தில் அரசு பஸ் மோதிய விபத்தில் கண்டக்டர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. ஏற்காடு அருகே, சாலையை சீரமைக்க கோரி அரசு பஸ் சிறைபிடிப்பு
ஏற்காடு அருகே சாலையை சீரமைக்க கோரி அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
5. பஸ், ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்
பஸ், ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.