பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
பொங்கல் பண்டிகை இன்று(புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. மேலும், பொருட்கள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
திருப்பூர்,
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம், வாகன வசதி போன்றவை நிறுவனங்கள் சார்பில் செய்து கொடுக்கப்படுகின்றன.
இதில் தங்கியிருந்து தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். மேலும், பலர் வாடகை வீடுகளில் தங்கியிருந்து வேலை செய்கிறார்கள். வேலை வாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால், திருப்பூருக்கு தினமும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து பலர் வேலை தேடி வருகிறார்கள்.
பண்டிகை
தொழில்துறையினருக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருந்து வருவதால், உடனே அவர்களை வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்குவது வழக்கம்.
இதில் திருப்பூர் மாவட்டம் மற்றும் கோவை உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வாரந்தோறும் சம்பளத்தை பெற்றுக்கொண்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். ஆனால் தொலைதூர மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பண்டிகை காலங்களில் தான் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
சொந்த ஊர்களுக்கு...
இதற்கிடையே இன்று (புதன்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக பின்னலாடை நிறுவன தொழிலாளர்கள் கடந்த 3 நாட்களாக தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் ஒரு சில நிறுவனங்களில் ஆர்டர்களை முடித்து கொடுப்பதற்காக நேற்று தொழிலாளர்கள் வேலை செய்தனர். வேலையை முடித்து விட்டு நேற்று மாலையில் இருந்தே பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் குவிந்தனர்.
இதுபோல் பொருட்களை வாங்கிய தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட பஸ்கள் மற்றும் ரெயில்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். பயணிகளின் நெரிசலை குறைப்பதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மொத்தம் 475 சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன.
இந்த பஸ்களில் செல்வோருக்கு வசதிக்காக திருச்சி மார்க்கமாக செல்வோருக்கு திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் சிவன் தியேட்டர் அருகே மற்றும் மதுரை மார்க்கமாக செல்வோருக்கு வசதிக்காக புதிய பஸ் நிலையம் உள்ளே தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது.
அலைமோதியது
இதுபோல் கோவை, பாலக்காடு, ஊட்டி மார்க்கமாக செல்வோருக்காக குமார் நகர் பிஷப் பள்ளி அருகே, சேலம், ஈரோடு மார்க்கமாக செல்வோருக்காக பழைய பஸ் நிலையம் அருகில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
ஒருவருக்கொருவர் முண்டியடித்தபடி பலர் பஸ்களில் ஏறினர். இதுபோல் தென்மாவட்டங்களுக்கு செல்கிற நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. படிக்கட்டுகளில் தொங்கியபடி பலரும் பயணம் செய்தனர். நேற்று இரவு 10:25 மணிக்கு எர்ணாகுளம்-பாட்னா வரை செல்லும் விரைவு ரெயில் திருப்பூர் வந்தது. அப்போது ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணிகள் இடம்பிடிப்பதற்காக முண்டியத்தபடி ரெயிலில் ஏறினர். அப்போது தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு மோதிக்கொண்டனர். இதனால் அங்கு பாதுகாப்புகாக நின்ற போலீசார் அவர்களை அழைத்து சென்றனர்.

Related Tags :
Next Story