மாவட்ட செய்திகள்

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் விபத்து: ஜவ்வரிசி ஆலை அதிபர் உள்பட 2 பேர் பலி + "||" + Accident at different places in Salem: Jawwarisi Two killed, including the mill president

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் விபத்து: ஜவ்வரிசி ஆலை அதிபர் உள்பட 2 பேர் பலி

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் விபத்து: ஜவ்வரிசி ஆலை அதிபர் உள்பட 2 பேர் பலி
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் ஜவ்வரிசி ஆலை அதிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
கொண்டலாம்பட்டி,

சேலம் அன்னதானப்பட்டி கந்தப்பா காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன் (வயது 77). இவர் சேலத்தில் ஜவ்வரிசி ஆலை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு கொண்டலாம்பட்டி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.


கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மினி லாரி அவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அத்தியப்பன் மீது மினி லாரியின் டயர்கள் ஏறியது. இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிட தொழிலாளி

தர்மபுரி மாவட்டம் பாப்பநாயக்கன்வலசு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (42). இவர் கோவையில் கட்டிட தொழிலில் ஈடுபட்டு வந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி அவர் கோவையில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். சேலம் ராக்கிப்பட்டி அருகே வந்தபோது திடீரென அவர் நிலைதடுமாறி முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரமசிவம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆலத்தூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி
ஆலத்தூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியாயினர்.
2. உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதியதில் புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலியாகினர்.
3. திருமானூர் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் பலி; 36 பேர் காயம்
கோக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பலியானார். 36 பேர் காயம் அடைந்தனர்.
4. வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் பார்வையாளர் பலி; 25 பேர் காயம்
அன்னவாசல் அருகே வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 25 பேர் காயமடைந்தனர்.
5. நாமகிரிப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பெண் பலி
நாமகிரிப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.