மாவட்ட செய்திகள்

போடி அருகே, இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் - துணை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார் + "||" + Near Bodi, Sports Competitions for Youth -Deputy First-Minister inaugurated

போடி அருகே, இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் - துணை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

போடி அருகே, இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் - துணை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
போடி அருகே இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகளை துணை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
போடி, 

போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறையின் சார்பில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பூப்பந்து போட்டியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் முதல் கட்டமாக போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி உள்பட 4 இடங்களில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

போட்டியின் மூலம் இளைஞர்களிடையே தலைமைப் பண்பு, கிராம இளைஞர்களிடம் கூட்டு மனப்பான்மை ஆகியவை உருவாக்கப்படும். மேலும் கிராமங்களில் உள்ள விளையாட்டு திறன்மிக்க இளைஞர்களை கண்டறிந்து, அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும். அவர்களை உயர்மட்ட போட்டிகளில் சாதனை படைக்க வைப்பதே இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். எனவே, இத்திட்டத்தின் மூலம் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு இளைஞர்கள் பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா, போடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.எம். சையதுகான், ஆர்.பார்த்திபன், போடி நகராட்சி முன்னாள் தலைவர் பழனிராஜ், ஒன்றிய செயலாளர் சற்குணம், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் உப்புக்கோட்டை ஊராட்சி பாலார்பட்டியில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது. இதற்கு தனி அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார் ஊராட்சி மன்றத் தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். அந்த மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் திருப்பதி செய்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. போடியில் அ.தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்
போடியில் அ.தி.மு.க. சார்பில் நிவாரண பொருட் களை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
2. கொரோனா பரிசோதனையில் தேனி மாவட்டம் 2-வது இடம் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
கொரோனா பரிசோதனையில் சென்னைக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
3. கொரோனா தடுப்பு பணிக்கு, 4 லட்சம் முக கவசங்கள், கிருமிநாசினி தெளிப்பு வாகனம் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்
கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக 4 லட்சம் முக கவசங்கள் மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் வாகனத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
4. கோயம்பேடு மார்க்கெட் வரும் பொதுமக்களுக்கு தினமும் 5 ஆயிரம் முககவசங்கள் - ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தகவல்
கோயம்பேடு மார்க்கெட் வரும் பொதுமக்களுக்கு தினமும் 5 ஆயிரம் முககவசங்கள் விலையில்லாமல் வழங்கப்படுவதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
5. தங்க நாணய பரிசு திட்டத்துடன் அறிமுகம்: 27 வகை மளிகை பொருட்களுடன் ரூ.2 ஆயிரத்துக்கு ‘தொகுப்பு பை’ - வீடு தேடி வரும் இந்த முயற்சிக்கு ஒரே நாளில் ஆயிரம் பேர் முன்பதிவு
தேனியில் தங்க நாணய பரிசு திட்டத்துடன், ரூ.2 ஆயிரத்துக்கு 27 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வீடுதேடி வழங்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சிக்கு ஒரே நாளில் ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...