கார் மோதி தனியார் தொழிற்சாலை ஊழியர் பலி


கார் மோதி தனியார் தொழிற்சாலை ஊழியர் பலி
x
தினத்தந்தி 18 Jan 2020 3:30 AM IST (Updated: 17 Jan 2020 10:13 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் புறநகர், துறைமங்கலம் நான்குசாலை சந்திப்பு அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் முத்துகுமார்(வயது 39).

பெரம்பலூர், 

முத்துகுமார் கடந்த 8 ஆண்டுகளாக ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்துவந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு இரவு 11.30 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் முத்துகுமார் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். 

திருச்சி- சென்னை நான்கு வழிச்சாலையில் கல்பாடி பிரிவு அருகே வந்தபோது அவருக்கு பின்னால் பெரம்பலூர் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முத்துகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து முத்துகுமாரின் சகோதரர் ராமர் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான பெரம்பலூர் மதனகோபாலபுரத்தை சேர்ந்த சுரேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story