போலியோ சொட்டு மருந்து முகாம் - 1,062 மையங்களில் நடக்கிறது


போலியோ சொட்டு மருந்து முகாம் - 1,062 மையங்களில் நடக்கிறது
x
தினத்தந்தி 19 Jan 2020 3:30 AM IST (Updated: 18 Jan 2020 10:36 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1,062 மையங்களில் நடக்கிறது.

நெல்லை,

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் போலியோ நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒரே தவணையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இந்த முகாம் மூலம் 1 லட்சத்து 42 ஆயிரத்து 116 குழந்தைகள் பயனடைகிறார்கள். கிராமப்புற பகுதிகளிலும், நகர்ப்புறங்களிலும் மொத்தம் 1,062 மையங் கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், இடம் பெயர்ந்த கட்டிட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், செங்கல் சூளைகளில் வேலை செய்யும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

மேலும் புறவழிச்சாலை, சுங்க சாவடிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் முகாம் அமைக்கப்படுகிறது.

மேற்கண்ட மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்த மையங்களில் மருத்துவத்துறை சார்ந்த 639 பணியாளர்களும், செவிலியர் கல்லூரி மாணவர்கள் 178 பேரும், சத்துணவு பணியாளர்கள் 1,640 பேரும், ரோட்டரி குழுவை சேர்ந்த 12 பேரும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 1,014 பேரும் என மொத்தம் 3,483 பணியாளர்கள் பணியாற்றுவார்கள்.

தாய்மார்கள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அருகில் உள்ள முகாமுக்கு அழைத்து சென்று போலியோ தடுப்பு சொட்டு மருந்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story