முசிறி, தா.பேட்டை, துறையூர் பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா


முசிறி, தா.பேட்டை, துறையூர் பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 18 Jan 2020 10:30 PM GMT (Updated: 18 Jan 2020 7:01 PM GMT)

முசிறி, தா.பேட்டை, துறையூர் பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

முசிறி,

முசிறி, தா.பேட்டை பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் முசிறி கைகாட்டியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு முசிறி தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். இதில் அ.தி.மு.க. ஒன்றிய, நகர நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தா.பேட்டை கடைவீதியில் அ.தி.மு.க. நகர செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்த விழாவில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயம் கட்சிக்கொடியேற்றி, எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் தா.பேட்டையை அடுத்த மேட்டுப்பாளையம், தும்பலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

துறையூர்

துறையூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவையொட்டி சிங்களாந்தபுரம், துறையூர் சிலோன் ஆபீஸ், சிக்கத்தம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு துறையூர் ஒன்றிய செயலாளர் சேனை.செல்வம், நகர செயலாளர் செக்கர் ஜெயராமன் ஆகியோர் மாலை அணிவித்து, கொடி ஏற்றி, இனிப்பு வழங்கினார்கள். இதில் சிங்களாந்தபுரம் கிளை செயலாளர் ராஜதுரை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பாஸ்கர், கிளை செயலாளர் சின்னசாமி மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

புள்ளம்பாடி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா ரெட்டிமாங்குடியில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஒன்றிய பிரதிநிதி அம்மாசி தலைமை தாங்கினார். ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அருணகிரி, ஒன்றிய கவுன்சிலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ராஜாராம், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


Next Story