மாவட்ட செய்திகள்

சுரண்டை அருகே பரிதாபம்: கல்லூரி மாணவி தற்கொலை + "||" + Awful near Surandai College student suicide

சுரண்டை அருகே பரிதாபம்: கல்லூரி மாணவி தற்கொலை

சுரண்டை அருகே பரிதாபம்: கல்லூரி மாணவி தற்கொலை
சுரண்டை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
சுரண்டை, 

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் சிவசங்கரி (வயது 18). இவர் தென்காசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

சிவசங்கரிக்கு கடந்த 2 ஆண்டுகளாக தீராத வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அவதிப்பட்டு வந்தார். இதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவசங்கரி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உடனடியாக சுரண்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சிவசங்கரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுரண்டை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிலாளி தற்கொலை
சின்ன காஞ்சீபுரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
2. அரிவாளால் வெட்டி மனைவியை கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை
தாம்பரம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியது.
3. தரகம்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தரகம்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
4. மது பழக்கத்தை கண்டித்தும் திருந்தாததால் மகனை அடித்துக்கொன்று தந்தை தற்கொலை
புதுக்கோட்டை அருகே மது பழக்கத்தை கண்டித்தும் திருந்தாததால் மகனை அடித்துக்கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
5. கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.