குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி முஸ்லிம் ஜமாத்தார்கள் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி முஸ்லிம் ஜமாத்தார்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2020 4:30 AM IST (Updated: 19 Jan 2020 11:46 PM IST)
t-max-icont-min-icon

அன்னவாசலில் குடியுரிமை சட்ட திருத்தத்தை முற்றிலும் ரத்து செய்யக் கோரி முஸ்லிம் ஜமாத்தார்கள் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

அன்னவாசல்,

அன்னவாசலில் குடியுரிமை சட்ட திருத்தத்தை முற்றிலும் ரத்து செய்யக்கோரி முஸ்லிம் ஜமாத்தார்கள் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜமாத் தலைவர் முகமது யூனூஸ் தலைமை தாங்கினார். மீராமொய்தீன் முன்னிலை வகித்தார். இதில் 300-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தேசிய கொடியுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்

பின்னர் மாநில கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலகுழு உறுப்பினர் தர்மராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அஷ்ரப்அலி, தி.மு.க.வை சேர்ந்த அக்பர்அலி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்துல்கரீம், சண்முகம், சுல்தான், த.மு.மு.க. முகமது சாதிக், நாம்தமிழர் கட்சி காவுதீன், பாப்புலர்பிராண்ட் ஆப் இந்தியா அபுபக்கர்சித்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத் திற்கு கண்டனம் தெரிவித்து குடியுரிமை சட்ட மசோதாவை திரும்பபெறு எனவும் என்.ஆர்.சி., என்.பி.ஆர்., சட்டங்களை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் இந்த சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியும் கண்டன உரை நிகழ்த்தினர். முடிவில் முத்தவல்லி முகமதுரிசா நன்றி கூறினார். இதில் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, வயலோகம் உள்பட பல பகுதிகளில் இருந்து திரளான முஸ்லிம் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிகாமணி தலைமையில், அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story