மாவட்ட செய்திகள்

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.16 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை + "||" + Kangayam breeder cattle for sale for Rs

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.16 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.16 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை
நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.16 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை செய்யப்பட்டன.
முத்தூர்,

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கேயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள் வளர்ப்போர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கேயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் காங்கேயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள் மயிலை பூச்சிகாளைகள், மயிலை மாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் ஆகிய காங்கேயம் இனங்களை மட்டும் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் காங்கேயம் இன நாட்டு பசுமாடுகள், கன்றுகள், காளைகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த சந்தையில் நேற்று காங்கேயம் இன பசுமாடுகளை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் அதிக ஆர்வத்துடன் நேரில் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.


ரூ.16 லட்சத்துக்கு விற்பனை

இதன்படி இந்த சந்தையில் நேற்று விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 94 காங்கேயம் இன காளைகள், மாடுகளில் மொத்தம் 45 நாட்டு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதன்படி சந்தையில் அதிகபட்சமாக 2 பல் கொண்ட காங்கேயம் இன செவலை பசுமாடு 9 மாத சினையுடன் ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சந்தையில் காங்கேயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.18 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது. இதன்படி நேற்று மட்டும் ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ.16 லட்சத்துக்கு காங்கேயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள், மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பங்குகளை தனியாருக்கு விற்பதை எதிர்த்து எல்.ஐ.சி. ஊழியர்கள் 1 மணி நேரம் வேலைநிறுத்தம்
எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பதை எதிர்த்து, திண்டுக்கல் மாவட்டத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள் 1 மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
2. பொங்கல் பண்டிகையையொட்டி, உழவர் சந்தைகளில் ரூ.1 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 785-க்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. இதையொட்டி பூஜை பொருட்கள் வாங்குவதற்கு கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.
3. பொங்கல் பண்டிகையையொட்டி பென்னாகரம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோர்
பொங்கல் பண்டிகையை யொட்டி பென்னாகரம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
4. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் கரும்பு விற்பனை தொடங்கியது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் வாரச்சந்தையில் கரும்பு விற்பனை தொடங்கி உள்ளது.
5. திருபுவனை அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
திருபுவனை அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.