மாவட்ட செய்திகள்

காடையாம்பட்டி அருகே கே.மோரூரில் மயான வசதி கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு + "||" + Public petition to collector asking for dormitory facility at K Moorur near Kadaiyampatti

காடையாம்பட்டி அருகே கே.மோரூரில் மயான வசதி கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

காடையாம்பட்டி அருகே கே.மோரூரில் மயான வசதி கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காடையாம்பட்டி அருகே உள்ள கே.மோரூர் பகுதி பொதுமக்கள் மயான வசதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.


மொத்தம் 285 மனுக்கள் பெறப்பட்டன. இதில் தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

மயான வசதி

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கே.மோரூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், ‘எங்கள் கிராமத்தில் அனைத்து சமூகத்தினரும் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய போதுமான மயான வசதி இதுவரை இல்லை.

மேலும் இறந்தவர்களின் உடலை ஆற்றங்கரையில் அடக்கம் செய்து வந்தோம். ஆனால் மழைக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் வருவதால் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியவில்லை. மேலும் ஏற்கனவே அடக்கம் செய்த இடத்திலேயே அடக்கம் செய்வதால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் விரைவில் மயான வசதி செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.

மின் இணைப்பு

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் ராமனிடம் கொடுத்துள்ள மனுவில், ‘எங்கள் பகுதியில் உள்ள ஓடையின் குறுக்கே அரசு புறம்போக்கு நிலத்தில் ஒருவர் கிணறு வெட்டி உள்ளார். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அதை தடுத்து நிறுத்தினர்.

இந்தநிலையில் அந்த கிணற்றுக்கு மின் இணைப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே அந்த கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்க கூடாது. மேலும் ஓடையின் குறுக்கே கிணறு வெட்டியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ரத்து செய்ய வேண்டும்

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி சத்யா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், ‘எங்கள் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை இந்துக்களின் மயானமாக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தோம். இந்தநிலையில் அந்த மயானத்தை வேறு ஒரு சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சுடுகாட்டு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
சுடுகாட்டு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. தடுப்பணை கட்ட மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர் அருகே புதிய தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், கட்டுமான பணிக்கு அப்பகுதியில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. பக்ரீத் பண்டிகையையொட்டி பிவண்டி, பால்கரில் பொதுமக்கள் கூட தடை
பக்ரீத் பண்டிகையையொட்டி பிவண்டி, பால்கரில் பொதுமக்கள் கூட்டம் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
4. கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.
5. வாடகை வாகன தகுதிச்சான்று பெறும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் கலெக்டரிடம், டிரைவர்கள் மனு
வாடகை வாகன தகுதி சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம், டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.