குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் முஸ்லிம்கள் 1 நாள் நோன்பு கடைபிடிப்பு


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் முஸ்லிம்கள் 1 நாள் நோன்பு கடைபிடிப்பு
x
தினத்தந்தி 21 Jan 2020 4:30 AM IST (Updated: 21 Jan 2020 2:04 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் முஸ்லிம்கள் 1 நாள் நோன்பு கடைபிடித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகர ஜமாத்துல் உலமா சபை சார்பில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் ஒன்றிணைந்து ஒரு நாள் நோன்பு கடை பிடிப்பது என முடிவு செய்தனர்.

இது குறித்து அறிவிப்பு செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று ஏராளமான முஸ்லிம் ஆண்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் ஒரு நாள் நோன்பு கடைபிடித்தனர். இவர்கள் அனைவரும் நேற்று அதிகாலையில் இருந்து தண்ணீர் அருந்தாமல் உணவு உட்கொள்ளாமல் மாலை வரை நோன்பிருந்தனர்.

நோன்பு திறப்பு

பின்னர் மாலை தஞ்சை ஆற்றங்கரை ஜூம்மா பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பிரார்த்தனை மற்றும் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைத்து பள்ளிவாசல்களின் இமாம்கள், நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதைப்போல வல்லத்தில் உள்ள ஜீம்ஆ பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பிரார்த்தனை மற்றும் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏராளமான முஸ்லிம்கள் நோன்பு திறந்தனர். 

Next Story