குலசேகரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து முஸ்லிம்கள் பேரணி


குலசேகரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து முஸ்லிம்கள் பேரணி
x
தினத்தந்தி 22 Jan 2020 4:15 AM IST (Updated: 21 Jan 2020 10:49 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து குலசேகரத்தில் முஸ்லிம்கள் பேரணி நடந்தது.

குலசேகரம்,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து குலசேகரம் காவஸ்தலம் பள்ளிவாசலில் இருந்து அரசமூடு வரை முஸ்லிம் ஜமாத் சார்பில் முஸ்லிம்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குலசேகரம் முஸ்லிம் ஜமாத் தலைவர் சாகுல் அமீது தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அமானுல்லா வரவேற்றார். இதில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், திருவட்டார் யூனியன் தலைவர் ஜெகநாதன், துணை செயலாளர் கிறிஸ்டோபர், குமரி திருவருட் பேரவை ஒருங்கிணைப்பாளர் மரிய வின்சென்ட், பொதுச்செயலாளர் கான், மாவட்ட ஜமாத் பேரவை ஆபிதீன் மக்லரி, எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் செய்யது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. நூர்முகமது, திருவட்டார் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய கொடி

இதில் கேரள அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி சம்பத் கலந்து கொண்டு பேசினார். முடிவில் முஸ்லிம் ஜமாத் செயலாளர் ஷாபி நன்றி கூறினார். பேரணியில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் 100 அடி நீள தேசிய கொடியை கைகளில் தூக்கியபடி வந்தனர். குலசேகரத்தில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story