வேலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
வேலூரில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
வேலூர்,
சாலை விபத்துகளை தடுக்க மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஜனவரி 20-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. வேலூர் புதிய பஸ்நிலையத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பஸ் கண்காட்சி, பெண்கள் மட்டும் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது.
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம், வேலூர் மாவட்ட போக்குவரத்து போலீஸ் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் காந்திசிலை அருகே நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமை தாங்கினார். வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஊர்வலம் காந்தி சிலையில் இருந்து புறப்பட்டு மக்கான்சிக்னல், காட்பாடிசாலை, நேஷனல் சர்க்கிள், கிரீன் சர்க்கிள் அருகே நிறைவடைந்தது.
இதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இருசக்கர வாகனம் இருவர் பயணிக்க மட்டுமே, படியில் பயணம் நொடியில் மரணம், சாலை விதிகளை பின்பற்றுவோம், செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டாதீர், சீட் பெல்ட், ஹெல்மெட் அணிவோம், ஓடும் பஸ்சில் ஏற வேண்டாம் என்பது உள்பட பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜசேகரன் (வேலூர்), வெங்கட்ராகவன் (குடியாத்தம்), ரெட்கிராஸ் சங்க செயலாளர் இந்தர்நாத், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுந்தரமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story