சின்னசாவடி குளத்தில் ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
சின்னசாவடி குளத்தில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆக்கூர்,
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள மடப்புரம் ஊராட்சியில் சின்னசாவடி குளம் உள்ளது. இந்த குளம் அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் பெரிதும் பயன்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது குளத்தை ஆகாயத்தாமரைகள் அடர்ந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆக்கிரமித்து உள்ளது. இதனால் குளத்தில் தண்ணீர் மாசு அடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் தொற்று நோய் ஏற்படுமோ? என அச்சப்படுகின்றனர். மேலும் குளத்தின் படித்துறைகள் இடிந்து கிடக்கின்றன.
ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும்
சாலை ஓரத்தில் குளத்தின் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட காரணங்களால் பொதுமக்கள் முழுமையாக குளத்தை பயன்படுத்த முடியவில்லை. எனவே குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, புதிய படித்துறைகளை அமைக்க வேண்டும்.
மேலும் சாலை ஓரத்தில் குளத்தில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பை தடுக்க சிமெண்டு கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

Related Tags :
Next Story