தேனியில் பரபரப்பு: ரஜினிகாந்த் உருவபொம்மை எரிப்பு - ஆதித்தமிழர் பேரவையினர் 30 பேர் கைது


தேனியில் பரபரப்பு: ரஜினிகாந்த் உருவபொம்மை எரிப்பு - ஆதித்தமிழர் பேரவையினர் 30 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2020 4:00 AM IST (Updated: 23 Jan 2020 1:38 AM IST)
t-max-icont-min-icon

பெரியார் குறித்து சர்ச்சைக் குரிய கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் உருவ பொம்மையை, தேனியில் எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி,

சென்னையில் சமீபத்தில் நடந்த ‘துக்ளக்’ பத்திரிகையின் 50-வது ஆண்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது பெரியார் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் தெரிவித்த கருத் துக்கு பல்வேறு தரப் பிலும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், தேனி பூதிப் புரம் சாலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் முன்பு ரஜினி காந்த்தை கண்டித்து நேற்று போராட்டம் நடத்தப் போவதாக தேனி மாவட்ட ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்தவர்கள் அறிவித்தனர். இதனால், அந்த தியேட்டர் முன்பு நேற்று காலையில் போலீசார் குவிக்கப் பட்டனர்.

போராட்டம் நடத்துவதற்கு வந்த நிர்வாகிகளை சாலையில் கூடுவதற்கு முன்பாகவே போலீசார் பிடித்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்நிலையில், ஒரு ஆட்டோவில் வந்த ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி கள், நடிகர் ரஜினிகாந்த் உருவ பொம்மையை சாலையில் வீசி தீவைத்து எரித்தனர். உடனே போலீசார் ஓடிச் சென்று உருவபொம்மை மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இந்த போராட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சிவா, மேற்கு மாவட்ட செய லாளர் நீலகனலன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாண வரணி மாவட்ட செயலாளர் அருந்தமிழன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். உருவபொம்மை எரிக்கப்பட்டதை தொடர்ந்து ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர், இந்த போராட் டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப் பட்டனர். பின்னர் அனை வரும் அங்கிருந்து வேறு திருமண மண்டபத்துக்கு மாற்றப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப் பட்டனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story