திருச்சியில் ஆர்.எம்.எஸ். ஊழியர்கள் உண்ணாவிரதம்
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். அலுவலக வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி,
திருச்சி கோட்ட அகில இந்திய ஆர்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். ஊழியர் சங்கம் சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். அலுவலக வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதிரிபுலியூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் மற்றும் சிதம்பரம் அலுவலக மூடல் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும், திண்டிவனம் ஆர்.எம்.எஸ். மீண்டும் இரவு பிரிவாக மாற்ற வேண்டும் என்றும், சனி-ஞாயிற்றுக்கிழமை பணிகளுக்கு உரிய எண்ணிக்கையில் ஊழியர்களை வழங்கிட வேண்டும் என்றும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது.
உண்ணாவிரத போராட்டத்தை மாநில செயலாளர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில செயலாளர்கள் சங்கரன், பரந்தாமன், கோட்ட செயலாளர்கள் குணசேகரன், கிஷோர்குமார், கிளை செயலாளர்கள் பிரபாகர், ஜெயப்பாண்டியன் ஆகியோர் பேசினார்கள். இதில் அகில இந்திய ஆர்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். ஊழியர் சங்கத்தின் அனைத்து கிளை ஆர்-3, ஆர்-4 ஊழியர்களும் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமும் எழுப்பப்பட்டது.

Related Tags :
Next Story