சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு


சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
x
தினத்தந்தி 23 Jan 2020 4:15 AM IST (Updated: 23 Jan 2020 3:13 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு.

தர்மபுரி,

தர்மபுரி நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் குருநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் வரவேற்று பேசினார். கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் மோகன், தர்மபுரி ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பெரியண்ணன், நகர எம்.ஜி.ஆர். அணி பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், தலைமை கழக பேச்சாளர் வாசுகி, கோவிந்தசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 1,200 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். தர்மபுரி நகரில் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் புதிய குடியிருப்புகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார்.

இதில் சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் பழனிசாமி, தகடூர் விஜயன், கூட்டுறவு அச்சக தலைவர் சுப்பிரமணியன், கூட்டுறவு பணியாளர் சங்க மாநில செயலாளர் சின்.அருள்சாமி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் பார்த்திபன், ஆறுமுகம், மணிபாலன், கூட்டுறவு சங்க தலைவர்கள் அங்குராஜ் நிர்வாகிகள் வடிவேல், செல்லதுரை, பிரபாகரன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் பெரியஅறிவாளி நன்றி கூறினார்.

Next Story