குடியுரிமை சட்ட திருத்தத்தால் முஸ்லிம்கள் உரிமைகள் பறிக்கப்படும் ஐதராபாத் எம்.பி. அசாதுத்தீன் ஒவைசி பேச்சு
குடியுரிமை சட்ட திருத்தத்தால் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படும் என ஐதராபாத் எம்.பி. அசாதுத்தீன் ஒவைசி பேசினார்.
மதுரை,
அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் சார்பில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுரை அண்ணாநகர் பகுதியில் நடந்த இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காதர்பாஷா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஐதராபாத் எம்.பி. அசாதுத்தீன் ஒவைசி கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது-
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு மக்களுக்கு எதிரான பல சட்ட திருத்தங்களை அவ்வப்போது கொண்டு வருகிறது. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான குடியுரிமை சட்ட திருத்தத்தை தற்போது கொண்டு வந்துள்ளது. இதனால் இந்தியாவில் வாழும் பெரும்பாலான மக்களின் குடியுரிமை பறிக்கப்படும். மத அடிப்படையில் சட்டங்கள் இயற்றக்கூடாது என இருக்கிறது. ஆனால், பா.ஜ.க. அரசு மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களை வஞ்சிக்கும் விதமாக இதுபோன்ற சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. குடியுரிமை சட்டம் கொண்டு வந்தால் ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளும் பறிக்கப்படும். அதிலும் குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைகள் முற்றிலும் பறிக்கப்படும். குடியுரிமையை பெற வேண்டும் என்றால் அதற்கு 21 ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என பா.ஜ.க. கூறுகிறது. அது சாத்தியமாகாத ஒன்று. அதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்ப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இந்த சட்டம் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் மற்ற மதத்தினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தாக்குதல் சம்பவங்கள்
இந்திய நாட்டை விரும்பும் எவரும் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள். ஆனால், தமிழகத்தில் ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிசாமி அரசு இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மக்களை பார்த்து தான் பயப்பட வேண்டும். மத்திய அரசை பார்த்து பயப்பட தேவையில்லை.
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாம் இப்போது போராடவில்லை என்றால் 100 வருடங்கள் பின்தங்கி சென்று விடுவோம். ஒரு முறை மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் நின்று விடக்கூடாது. அந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும். மோடிக்கு மக்களை பற்றி கவலை கிடையாது. மோடியின் ஆட்சிக்கு பின்பு இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவைகள் அதிகரித்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்தை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். இந்த சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story