குடியரசு தினத்தை முன்னிட்டு திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை


குடியரசு தினத்தை முன்னிட்டு திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 24 Jan 2020 4:30 AM IST (Updated: 24 Jan 2020 12:43 AM IST)
t-max-icont-min-icon

குடியரசு தினத்தையொட்டி திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடு்பட்டு வருகின்றனர்.

திருவாரூர்,

குடியரசு தினத்தை முன்னிட்டு எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகிறது.

பாதுகாப்பு பணி

திருவாரூர் ரெயில்நிலையத்தில் போலீசார் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பயணிகள் உடமைகளை உரிய சோதனைக்கு பின்னர் அனுமதித்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் உள்ளவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சந்்தேகத்துக்குரிய வகையில் கிடக்கும் பொருட்களை பயணிகள் யாரும் தொட வேண்டாம் என்கிற விழிப்புணர்வு செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்கள், வழிபாட்டு தலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு்்பட்டனர். 

Next Story