மாவட்ட செய்திகள்

எந்திரம் மூலம் நெல் அறுவடை: கூடுதல் வாடகை வசூலிக்கப்படுகிறதா? அதிகாரிகள் ஆய்வு + "||" + Paddy Harvesting by Machine: Are There Additional Charges? Officers examined

எந்திரம் மூலம் நெல் அறுவடை: கூடுதல் வாடகை வசூலிக்கப்படுகிறதா? அதிகாரிகள் ஆய்வு

எந்திரம் மூலம் நெல் அறுவடை: கூடுதல் வாடகை வசூலிக்கப்படுகிறதா? அதிகாரிகள் ஆய்வு
எந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யப்படும் இடங்களில் கூடுதல் வாடகை வசூலிக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி 1 லட்சத்து 37 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 1 லட்சம் எக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. பெரும்பாலான இடங்களில் எந்திரங்கள் மூலம் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.


இதற்காக சேலம், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து நெல் அறுவடை எந்திரங்கள் வந்துள்ளன. தற்போது ஒரத்தநாடு, தஞ்சை, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனியார் நெல் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதலாக வாடகை வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் புகார்கள் தெரிவித்தனர்.

வாடகை நிர்ணயம்

இதையடுத்து நெல் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்வதற்கான முத்தரப்பு கூட்டம் கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. இதில் டயர் வகை நெல் அறுவடை எந்திரங்களுக்கு 1 மணி நேர வாடகை ரூ.1,500 என்றும், செயின் வகை நெல் அறுவடை எந்திரங்களுக்கு 1 மணி நேர வாடகை ரூ.2 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நெல் அறுவடை நடைபெறும் இடங்களில் எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தும்படி கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கான் மேற்பார்வையில் வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் குமணன், இளநிலை பொருளாளர் மாணிக்கவேலு மற்றும் அதிகாரிகள் நெல் அறுவடை பணிகள் நடைபெறும் கிராமங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கூடுதலாக வசூலிக்கக்கூடாது

அப்போது மாவட்ட கலெக்டரால் நிர்ணயிக்கப்பட்ட வாடகை தொகையை விட கூடுதலாக வசூல் செய்யக்கூடாது என அறிவுறுத்தினர். மேலும் கூடுதல் வாடகை தொகை வசூலிப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் ரூ.3¾ கோடி செலவில் சீரமைப்பு பணி கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதியில் ரூ.3¾ கோடி செலவில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2. கனகன் ஏரியில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு
கனகன் ஏரியில் கவர்னர் கிரண்பெடி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
3. நெல்லை தாமிரபரணி ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணியை ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் ஆய்வு
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணியை ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் நேற்று ஆய்வு செய்தார்.
4. வயல்களில் வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு
அரியலூர் வட்டாரத்தில் மக்காச்சோளம், நெல் மற்றும் பருத்தி வயல்களில் நடைபெற்ற பயிர் அறுவடை பரிசோதனைகளை வேளாண்மை துணை இயக்குனர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.
5. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கலெக்டர்களுடன் நில சீர்திருத்தம் தொடர்பாக அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கலெக்டர்களுடன் நிலசீர்திருத்தம் தொடர்பாக அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.