மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பேரணி - கண்டன ஆர்ப்பாட்டம் வேல்முருகன் பங்கேற்பு + "||" + Velumurugan participated in the protest march to repeal the Citizenship Amendment Act

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பேரணி - கண்டன ஆர்ப்பாட்டம் வேல்முருகன் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பேரணி - கண்டன ஆர்ப்பாட்டம் வேல்முருகன் பங்கேற்பு
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மல்லிப்பட்டினத்தில் பேரணி- ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வேல்முருகன் பங்கேற்றார்.
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் ஜமாத் மற்றும் அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மல்லிப்பட்டினம் பஸ் நிலையத்தில் தொடங்கிய பேரணி புதுமனைத்தெரு மில் ரோடு வரை சென்றது. பின்னர் அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஜமாத் தலைவர் கமருதீன் தலைமை தாங்கினார். செயலாளர் அசன் முகைதீன், சமுதாய நல மன்ற தலைவர் அப்துல் ஹலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ் மாநில எஸ்.டி.பி.ஐ கட்சி செயலாளர் அபுபக்கர் சித்திக், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் ஹாஜாஅலாவுதீன், கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முத்து உத்திராபதி ஆகியோர் பேசினர்.


தமிழில் குடமுழுக்கு

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து போராடி வருகிறோம். இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களை இந்தியாவில் இருந்து பிரிப்பதே நரேந்திரமோடி, அமித்ஷா ஆகியோரின் திட்டம். பல மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என கூறி உள்ளது. விவசாயிகள், மாணவர்கள் மீதும் அக்கறை இல்லாத ஆட்சி தான் மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கிறது. தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் தான் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. விலைவாசி உயர்வை கண்டித்து மகிளா காங்கிரசார் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து, மகிளா காங்கிரசார் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2. சித்த மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஒருங்கிணைந்த மரபுவழி சித்த மருத்துவர்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
3. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நாகையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. பஸ் பாஸ் வழங்கக்கோரி திரு.வி.க. அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்
பஸ் பாஸ் வழங்கக்கோரி திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.