மாவட்ட செய்திகள்

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த நுழைவு தேர்வையே எதிர்த்தோம் நீட் தேர்வுக்கு எதிரான கூட்டத்தில் கி.வீரமணி பேச்சு + "||" + MGR. Kira Veeramani talks at the meeting against the NEET

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த நுழைவு தேர்வையே எதிர்த்தோம் நீட் தேர்வுக்கு எதிரான கூட்டத்தில் கி.வீரமணி பேச்சு

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த நுழைவு தேர்வையே எதிர்த்தோம் நீட் தேர்வுக்கு எதிரான கூட்டத்தில் கி.வீரமணி பேச்சு
எம்.ஜி.ஆர். கொண்டு வந்த நுழைவு தேர்வையே எதிர்த்தோம் என நீட் தேர்வுக்கு எதிரான கூட்டத்தில் கி.வீரமணி கூறினார்.
கரூர்,

‘நீட்‘ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் பிரசார பயண குழுவினர் கன்னியாகுமரியில் இருந்து வேன் மூலம் பிரசார பயணத்தை தொடங்கினர். நேற்று மாலையில் கரூருக்கு வந்த பிரசார பயண குழுவினருக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


பின்னர் கரூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காளிமுத்து வரவேற்று பேசினார். பொதுக்குழு உறுப்பினர் அன்பு முன்னிலை வகித்தார். தலைமை கழக சொற்பொழிவாளர் பெரியார்செல்வன், கிராமப்புற பிரசாரக் குழு மாநில அமைப்பாளர் அன்பழகன் ஆகியோர் தொடக்க உரை ஆற்றினர். திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், ஜெயக்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ஒடுக்கப்பட்டசமுதாய மக்கள் தங்கள் தோளில் துண்டு போட கூடாது. முழங்காலுக்கு கீழ் வேட்டி அணிய கூடாது. காலில் செருப்பு அணிய கூடாது. கையில் குடை பிடிக்க கூடாது என பல பிரச்சினைகள் இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. அப்படிபட்ட சமுதாயத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர் பெரியார் ஆவார்.

பெரியார்

வெள்ளைக்காரன் கருப்பன் என்று பிரித்து, தென் ஆப்பிரிக்காவில் கருப்பின மக்களை அடிமையாக்கிய நேரத்தில் கூட அங்கே பல போராட்டங்கள் நடந்துள்ளது. மண்டேலா போன்றவர்கள் முன்னின்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி உள்ளனர். நீங்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும். நம்முடைய நாட்டில் ஜாதி முறை உள்ளது. இது மனித தர்ம முறைக்கு எதிரானது. இதை விட கேவலமானது என்று தேடினால் கூட கண்டு பிடிக்க முடியாது. காரணம் மனிதனை, மனிதன் தொட்டால் குற்றம் என்றனர்.

சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் கல்வி கற்ற விகிதம் 1 விழுக்காடு தான் இருந்துள்ளது. பின்னர் காலம் செல்ல, செல்ல கல்வி அறிவு குறைவாகவே இருந்து உள்ளது. திராவிடர் கழகம் என்ன செய்தது என்கின்றனர். மக்களுக்கு கல்வி கண் கொடுத்த மூன்றாம் தர போராளியாக இருந்தவர் தான் பெரியார்.

விரட்டி அடித்தோம்

மக்களுக்கு நீட் தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எம்.ஜி.ஆர். கொண்டு வந்த நுழைவு தேர்வை எதிர்த்து, திராவிட கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் போராடி விரட்டி அடித்தோம். நுழைவு தேர்வு கூடாது என்று சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது மந்திரிகளுக்கு தெரியவில்லை.

ஒரு சட்டம் உள்ளபோது, இன்னொரு சட்டம் வர முடியாது. குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அப்படிபட்ட நிலையில் நீட் தேர்வை கொண்டு வருவதின் ரகசியம் என்ன? இந்திய பிரதமர் இந்தியா ஒரே நாடு என்று கூறுகிறார். அவ்வாறு கூறும் அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டுமானத்திற்கு நீட் தேர்வு சட்டவிரோதம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கட்சி சார்பின்றி அனைவருக்கும் உழைப்பேன்; அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
கட்சி சார்பின்றி அனைவருக்கும் உழைப்பேன் என டெல்லி முதல் மந்திரியாக பதவியேற்று கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
2. விண்வெளி ஆய்வுகள் குறித்த படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
விண்வெளி ஆய்வுகள் குறித்த படிப்புகளையும் மாணவர்கள் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என முன்னாள் இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
3. சேலத்தில் ஐ.பி.எல்.போட்டிகளை நடத்த அரசு துணை நிற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த அரசு துணை நிற்கும் என்று கூறினார்.
4. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
5. ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.