மாவட்ட செய்திகள்

காரிமங்கலம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை + "||" + What is the reason for the suicide of a schoolgirl hanging near Karimangalam? Police are investigating

காரிமங்கலம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

காரிமங்கலம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
காரிமங்கலம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மேல்சவுளுப்பட்டி தலையன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். கூலித்தொழிலாளி. இவரது மகள் மணிமேகலை (வயது 16). இவர் பந்தாரஅள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.


நேற்று முன்தினம் இரவு தனது அக்காள் வித்யாவுடன் வழக்கம்போல் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார். நேற்று அதிகாலை அவரது அக்காள் பார்த்தபோது வீட்டில் மணிமேகலை இல்லை. இதனால் திடுக்கிட்ட அவர் அக்கம்பக்கத்தில் சென்று மணிமேகலையை தேடி பார்த்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அப்போது வீட்டின் அருகிலுள்ள மரத்தில் மணிமேகலை உடல் தூக்கில் தொங்கியது. இதனைக்கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். இதைக் கேட்டதும் அக்கம்பக்கம் இருந்த உறவினர்கள் அங்கு ஓடி வந்து பார்த்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காரிமங்கலம் போலீசார் அங்கு வந்து மணிமேகலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், மணிமேகலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மணிமேகலை தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. அனுமதியின்றி பேரணி-பொதுக்கூட்டம்: எம்.பி.க்கள் திருமாவளவன், ஜோதிமணி உள்பட 3 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
புத்தாநத்தம் பகுதியில் அனுமதியின்றி பேரணி-பொதுக்கூட்டம் நடத்தியதாக எம்.பி.க்கள் திருமாவளவன், ஜோதிமணி உள்பட 3 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2. ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 1½ ஆண்டுக்கு பிறகு 4 பேர் கைது இரிடியம் மோசடி காரணமா? போலீசார் விசாரணை
ஜலகண்டாபுரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இரிடியம் மோசடி காரணமாக இந்த கொலை நிகழ்ந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
3. ஓமலூர் அருகே, உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் லாரி உரிமையாளர் அடித்துக்கொலை? போலீசார் விசாரணை
ஓமலூர் அருகே லாரி உரிமையாளர் மர்மமான முறையில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் தேர்தல் முன்விரோதத்தில் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்த சிறுவன் கைவிலங்குடன் தப்பி ஓட்டம் போலீசார் வலைவீச்சு
நாகையில், போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்த சிறுவன் கைவிலங்குடன் தப்பி ஓடிவிட்டான். அவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. திருச்சிற்றம்பலம் எமதர்மராஜன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை
திருச்சிற்றம்பலம் எமதர்மராஜன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை