சீனாவில் இருந்து மும்பை வந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை
சீனாவில் இருந்து மும்பை வந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.
மும்பை,
நமது அண்டை நாடான சீனாவில் வேகமாக பரவி வரும் ‘கொரோனா’ என்ற கொடிய வைரஸ் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், பல்வேறு நாடுகளுக்கு இந்த வைரஸ் நோய் பரவ தொடங்கி இருப்பது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் இந்த வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி உள்ளன. சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
காய்ச்சல், இருமல், சுவாச கோளாறுகள் இந்த நோயின் அறிகுறிகள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இதுபோன்ற அறிகுறியுடன் சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மராட்டிய அரசு மும்பை கஸ்தூர்பா மாநகராட்சி ஆஸ்பத்திரி மற்றும் புனேயில் நாயுடு ஆஸ்பத்திரியில் பிரத்யேக ஏற்பாடு செய்து உள்ளது.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் சீனாவில் இருந்து வந்த 3 பயணிகள் மும்பை சிஞ்ச்பொக்லியில் உள்ள கஸ்தூர்பா ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்கள் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு தேவையான மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல ஹாங்காங்கிலிருந்து திரும்பிய மற்றொரு பயணி வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மராட்டிய மாநில சுகாதாரத்துறை கண்காணிப்பு அதிகாரி பிரதீப் அவாதே நிருபர்களிடம் கூறியதாவது:-
சீனாவில் இருந்து மும்பை, புனேக்கு வந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 பேருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 3 பேர் மும்பை கஸ்தூர்பா ஆஸ்பத்திரியல் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். சீனாவில் இருந்து மட்டுமின்றி எந்த நாட்டில் இருந்து வரும் பயணிகளையும் அடுத்த 28 நாட்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மும்பை மாநகராட்சி சுகாதார நிர்வாக அதிகாரி டாக்டர் பத்மஜா கேஸ்கர் கூறுகையில், மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் யாராவது சிகிச்சைக்கு வந்தால் உடனடியாக மாநகராட்சிக்கு தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளோம்” என்றார்.
சீனாவில் இருந்து வந்த 3 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதால் மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பீதி தொற்றிக்கொண்டு உள்ளது.

Related Tags :
Next Story