போடி, உத்தமபாளையத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


போடி, உத்தமபாளையத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
x

போடி, உத்தமபாளையத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உத்தமபாளையம்,

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி முஸ்லிம்கள் நேற்று போடி கட்டபொம்மன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதுபோல குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி உத்தமபாளையத்தில் ஷாபி பள்ளிவாசல் அருகில் முஸ்லிம்கள் வாயில் கருப்புதுணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத்தின் உத்தமபாளையம் மண்டல பொறுப்பாளர் பெரோஸ்கான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், அனைத்து ஜமாத் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், உலமாக்கள் மற்றும் முஸ்லிம் இயக்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Next Story