கரூர் அரசு மருத்துவக்கல்லூரியை அமைச்சர்கள் ஆய்வு - மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினர்

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அமைச்சர்கள் ஆய்வு செய்து, மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினர்.
கரூர்,
கரூர் சனப்பிரட்டியில் ரூ.269 கோடியே 58 லட்சம் மதிப்பில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். கீதா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, நிர்வாக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மாதிரியை அமைச்சர்கள் பார்வையிட்டார்கள். அதனைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான விடுதிகள், மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனர். பின்னர், மருத்துவக்கல்லூரி மாணவ- மாணவிகளிடம் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பது குறித்தும் கலந்துரையாடினர்.
இதில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரோஸி வெண்ணிலா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (மருத்துவம்) மகாவிஷ்ணு, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் பேங்க் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story