பிரேசில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பிரேசில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2020 3:45 AM IST (Updated: 26 Jan 2020 12:56 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் பிரேசில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை, 

பிரேசில் நாட்டு ஜனாதிபதி போல்சனரோ இந்தியாவுக்கு வர எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்கா எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்துக்கு பன்னாரி அம்மன் ஆலை செயலாளர் பலராமன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஸ்டாலின் மணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், இந்திய கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முற்படும் பிரேசில் நாட்டு ஜனாதிபதி போல்சனரோ இந்தியாவுக்கு வர எதிர்ப்பு தெரிவித்து கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதில் சுப்பிரமணி, வெங்கடேசன், ராமதாஸ், ரஜினி ஏழுமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story