மாவட்ட செய்திகள்

ராதாபுரம் அருகே, தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை + "||" + 10-pound jewelry robbery at laborer's house, near Radapuram

ராதாபுரம் அருகே, தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை

ராதாபுரம் அருகே, தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை
ராதாபுரம் அருகே தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராதாபுரம், 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சமத்துவபுரம் கதிரேசன் நகரை சேர்ந்தவர் இசக்கியப்பன். இவர் கேரளாவில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவ்வப்போது அவர் விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வது உண்டு.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு அந்தோணியம்மாள் சென்று விட்டார். பின்னர் மறுநாள் காலையில் அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அந்தோணியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. மொத்தம் 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். 

பின்னர் இதுகுறித்து ராதாபுரம் போலீஸ் நிலையத்தில் அந்தோணியம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வினுகுமார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் துணிகரம்: கட்டிட காண்டிராக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகை கொள்ளை
ஈரோட்டில், கட்டிட காண்டிராக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகை மற்றும் பட்டுப்புடவைகளை துணிகரமாக அள்ளிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. வளசரவாக்கத்தில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் 131 பவுன் நகை கொள்ளை
வளசரவாக்கத்தில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் 131 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
3. வளசரவாக்கத்தில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் 131 பவுன் நகை கொள்ளை
வளசரவாக்கத்தில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் 131 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
4. பார்வதிபுரம் அருகே துணிகரம்: எலக்ட்ரீசியன் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை - கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
பார்வதிபுரம் அருகே எலக்ட்ரீசியன் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
5. ஊரப்பாக்கம் அருகே, காண்டிராக்டர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை
ஊரப்பாக்கம் அருகே காண்டிராக்டர் வீட்டில் 35 பவுன் நகை, ரூ.13 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.