இலங்கையில் ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் சிறையில் அடைப்பு
இலங்கை மீனவர்களர் பிடித்து செல்லப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் பீட்டர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஸ்வீட்டர், ரூம்ஸ், ரவிஸ்டன், ஆக்லின், ராஜ், ராமர், சுவிக்கர், டேவிட், ஆறுமுகம், சேவியர், முனியசாமி ஆகிய 11 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
அதனை தொடர்ந்து இவர்கள் அனைவரும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 11 மீனவர்களையும் வருகிற (பிப்ரவரி) 12-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story