காஞ்சீபுரத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய மேலும் 2 ரவுடிகள் கைது


காஞ்சீபுரத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய மேலும் 2 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 30 Jan 2020 3:45 AM IST (Updated: 30 Jan 2020 4:06 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய மேலும் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரம் பெருமாள்நாயக்கன் தெருவை சேர்ந்த நாராயணன் என்கிற நரேஷ்(வயது34), காமராஜர் நகரை சேர்ந்த சீனிவாசன் என்கிற சீனு(20) என்பது தெரியவந்தது.

ரவுடிகளான இவர்கள் இருவரும், காஞ்சீபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி தணிகாவின் நண்பர்கள் எனவும் தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளது. இவர்கள் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி அச்சுறுத்தி வந்துள்ளனர்.

2 பேரிடம் இருந்து கத்தி, உருட்டுக்கட்டைகள் மற்றும் ஒரு மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே காஞ்சீபுரத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story