விலை உயர்வை கட்டுப்படுத்த எகிப்து நாட்டில் இருந்து 7 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி


விலை உயர்வை கட்டுப்படுத்த எகிப்து நாட்டில் இருந்து 7 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி
x
தினத்தந்தி 29 Jan 2020 11:21 PM GMT (Updated: 29 Jan 2020 11:21 PM GMT)

விலை உயர்வை கட்டுப்படுத்த எகிப்து நாட்டில் இருந்து 7 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த ஆண்டு பருவம் தவறிய பெய்த மழையால் பயிரிடப்பட்ட வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் நாசமானது. விளைச்சல் குறைந்து பற்றாக்குறை ஏற்பட்டதால் அவைகளின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். குறிப்பாக வெங்காயம், உருளைக்கிழங்கு கிலோ ரூ.100-ஐ தொட்டது.

இதைத்தொடர்ந்து விலையை கட்டுப்படுத்த எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மராட்டிய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் எகிப்து நாட்டில் இருந்து கப்பலில் கன்டெய்னர்களில் கொண்டுவரப்பட்ட சுமார் 7 ஆயிரம் டன் வெங்காயம் நவிமும்பை ஜவகர்லால் நேரு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது.

இதுபற்றி வியாபாரி ஒருவர் கூறுகையில், மொத்த மார்க்கெட்டுகளில் கிலோ வெங்காயம் ரூ.65 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது. தற்போது வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் இனி மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.23-க்கும், சில்லரை கடைகளில் ரூ.45-க்கும் விலை குறைந்து விற்பனை ஆகும் என தெரிவித்தார்.

Next Story