மாவட்ட செய்திகள்

டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் இன்று முதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை: மத்திய மந்திரி பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார் + "||" + The AC will be on the Transhorpe route today. Electric Rail Service: Union Minister Push Goyal launches

டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் இன்று முதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை: மத்திய மந்திரி பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார்

டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் இன்று முதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை: மத்திய மந்திரி பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார்
டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் இன்று முதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்படுகிறது. இதனை மத்திய மந்திரி பியூஷ் கோயல் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மும்பை,

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் இருந்து டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் முதல் முறையாக ஏ.சி. மின்சார ரெயில் சேவை இன்று(வியாழக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. இந்த ஏ.சி. மின்சார ரெயில்கள் தானே முதல் வாஷி இடையே பன்வெல் வரையிலான அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.


ஏ.சி. மின்சார ரெயில் சேவையை மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ்கோயல் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். விழாவுக்காக சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தின் பிளாட்பாரம் 18-ம் எண் பகுதியில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில் இருந்தபடி மத்திய மந்திரி பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, மாநில மந்திரிகள் ஏக்நாத் ஷிண்டே, ஆதித்ய தாக்கரே, அஸ்லம் சேக், மேயர் கிஷோரி பெட்னேக்கர், உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் புதிதாக கட்டப்பட்டு உள்ள நடைமேம்பாலங்கள், காட்கோபர், காமன் ரோடு ரெயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டிக்கெட் கவுண்ட்டர்கள், 20 ரெயில் நிலையத்தில் வைபை வசதிகள் போன்றவற்றை பயணிகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்’ - பொதுமக்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இன்று(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு இன்று தூக்கு இல்லை
நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று நிறைவேற்றப்படுவதாக இருந்த தூக்கு தண்டனை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
3. 7 மாதங்களுக்கு பின்னர் காஷ்மீரில் இன்று பள்ளிகள் திறப்பு
7 மாதங்களுக்கு பின்னர் காஷ்மீரில் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
4. கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குவதையொட்டி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குவதையொட்டி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சபையில் எப்படி பேசுவது என்பது குறித்து புதிய மந்திரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
5. மராட்டிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்க உள்ளன.