‘உனது தங்கையின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன்’ மனைவியை மிரட்டிய கணவர் கைது


‘உனது தங்கையின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன்’ மனைவியை மிரட்டிய கணவர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2020 4:30 AM IST (Updated: 31 Jan 2020 1:12 AM IST)
t-max-icont-min-icon

குடும்பம் நடத்த வராவிட்டால் உனது தங்கையின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மனைவியை மிரட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் தினேஷ்(வயது 31). இவருக்கு 28 வயதில் மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். தினேஷ் குடித்துவிட்டு தகராறு செய்ததால் அவருடைய மனைவி கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தினேஷின் மனைவியை பார்க்க அவரது 22 வயது தங்கை அடிக்கடி அங்கு வந்து சென்று உள்ளார். அப்போது அவர் குளியல் அறையில் குளிக்கும் காட்சிகளை தினேஷ் தனது செல்போனில் படம் பிடித்து வைத்து உள்ளார்.

நேற்று இரவு தினேஷ், தனது மனைவியின் உறவினர்கள் 2 பேரின் செல்போனுக்கு மனைவியின் தங்கை குளியல் அறை காட்சி வீடியோவை அனுப்பினார். மேலும், “என்னுடன் நீ குடும்பம் நடத்த வராவிட்டால் உனது தங்கையின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன்” என்றும் தனது மனைவியை மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் வளசரவாக்கம் சென்று தினேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story