மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை - அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், யுத்தபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி(வயது 42). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2017-ம் ஆண்டு மனவளர்ச்சி குன்றிய 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்து சிறையில் அடைத்தார்.
இந்த வழக்கு நேற்று அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்தியதாரா குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து கோபியை போலீசார் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story