குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராட்டம் நடத்தும் - சித்தராமையா பேச்சு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்று சிக்கமகளூருவில் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா சிக்ககெரே கிராமத்தில் ஜமீயா மசூதியில் உருஷ் திருவிழா நேற்று தொடங்கியது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கலந்துகொண்டு உருஷ் திரு விழாவை தொடங்கி வைத்தார்.
பின்னர் நடந்த விழாவை சித்தராமையா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-
நாட்டு மக்களுக்கு எதிராக பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. சிறுபான்மையின மக்களை ெவளியேற்ற பா.ஜனதா துடிப்பது ஏன்?. சிறுபான்மையின மக்களும் இந்தியர்கள் தான். மதத்தின் அடிப்படையில் பா.ஜனதா ஆட்சி செய்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் சிறுபான்மை இன மக்களை துண்டாக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தும். மக்கள் விரோத நடகடிக்கைகளில் மத்திய பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story