பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - நாகையில் நடந்தது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 31 Jan 2020 10:15 PM GMT (Updated: 31 Jan 2020 5:55 PM GMT)

நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகையில் உள்ள மண்டல நுகர்பொருள் வாணிபக்கழகம் முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் கோதண்டபாணி, சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் ராஜ்மோகன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தினந்தோறும் நேரடியாக கூலி வழங்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக விவசாயிகளின் இடர்பாடுகளை போக்கி முறையாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும். சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வங்கி மூலம் கூலி வழங்கும் முறையை கைவிட்டு தினந்தோறும் நேரடியாக கூலி வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் வழங்கப்படாமல் விடுபட்ட அனைவருக்கும் காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும்.

நிபந்தனையின்றி பணி வழங்க வேண்டும். பல நாட்கள் இயக்கம் செய்யப்படாததால் ஏற்படுகின்ற எடை இழப்பை கொள்முதல் பணியாளர்கள் மீது திணிக்க கூடாது. கொள்முதலுக்கு இடையூறாக சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வயது வரம்பு மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story