வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது: - ரூ.100 கோடி பரிவர்த்தனை பாதிப்பு


வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது: - ரூ.100 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2020 10:30 PM GMT (Updated: 31 Jan 2020 8:42 PM GMT)

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் ரூ.100 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

திருச்சி, 

20 சதவீத ஊதிய உயர்வை சம்பளத்தின் அடிப்படையில் வழங்க வேண்டும். வங்கி அதிகாரிகளுக்கு முறைப்படுத்தப்பட்ட வேலை நேரத்தை அறிவிக்க வேண்டும். சிறப்பு படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்ைத கைவிட வேண்டும். ஊழியர்களின் நலநிதியை உயர்த்த வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஜனவரி மாதம் 31-ந்தேதி மற்றும் பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ஆகிய 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேைல நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் காசோலை மற்றும் பணபரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன. கண்டோன்மெண்ட் மெக்டொனால்ட்ஸ்ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கியின் பிரதான கிளையில் வங்கி ஊழியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகன், ராமராஜ், அசோக்குமார், மனோகரன், கோபாலகிருஷ்ணன், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இது குறித்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராமராஜ் கூறுகையில், “எங்களுடைய 2 நாள் வேலை நிறுத்தம் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் 200 வங்கி கிளைகள் இயங்கவில்லை. 2,500 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டத்தில் நாெளான்றுக்கு ரூ.100 கோடி பரிவர்த்தனை பாதிப்படையும்” என்றார்.

Next Story