ஆக்ராவில் இருந்து 2 வயது குழந்தையை கடத்தி விற்க முயன்ற பெண் கைது


ஆக்ராவில் இருந்து 2 வயது குழந்தையை கடத்தி விற்க முயன்ற பெண் கைது
x
தினத்தந்தி 1 Feb 2020 4:42 AM IST (Updated: 1 Feb 2020 4:42 AM IST)
t-max-icont-min-icon

ஆக்ராவில் இருந்து 2 வயது குழந்தையை கடத்தி விற்க முயன்ற பெண் நவிமும்பை போலீசில் சிக்கினார்.

மும்பை,

நவிமும்பை ஏ.பி.எம்.சி. மார்க்கெட் அருகே கோப்ரி கிராமத்தில் 40 வயதுடைய பெண் 2 வயது குழந்தையுடன் சந்தேகப்படும்படியாக நடமாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அப்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண் அக்குழந்தையை கடத்தி வந்து விற்க முயன்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

அதாவது கடந்த 25-ந் தேதி ஆக்ராவில் உள்ள அபுலாலா தர்காவிற்கு வந்த ஒரு தம்பதியின் குழந்தையை அவர்கள் அசந்த நேரமாக பார்த்து அந்த பெண் கடத்தி வந்ததுள்ளார்.

பின்னர் கோப்ரி கிராமத்தில் குழந்தை இல்லாத தம்பதிக்கு அக்குழந்தையை ரூ.60 ஆயிரத்திற்கு விற்க முயன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து குழந்தையை மீட்டதுடன், அந்தபெண்ணையும் கைது செய்தனர்.

மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் குழந்தை மீட்கப்பட்டது குறித்து ஆக்ரா போலீசாருக்கு தகவல் தெரிவித்து பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story