பால்கரில் மீண்டும் நிலநடுக்கம்; மக்கள் பீதி


பால்கரில் மீண்டும் நிலநடுக்கம்; மக்கள் பீதி
x
தினத்தந்தி 1 Feb 2020 5:01 AM IST (Updated: 1 Feb 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

பால்கர் மாவட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக நிலநடுக்கம் என்ற இயற்கை பேரிடர் அச்சுறுத்தி வருகிறது.

மும்பை,

பால்கர் மாவட்டத்தின் தகானு தாலுகாவில் உள்ள துண்டல்வாடி கிராமம், தலசாரி ஆகிய இடங்களில் அடிக்கடி இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. நிலநடுக்கத்துக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.

இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பூகம்பம் ஏற்பட்டு விடுமோ என உயிர் பயத்துடன் தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மதியம் 1.24 மணியளவில் தலசாரியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 

இது ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் பீதி அடைந்தனர். இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

Next Story