மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய உணவு வணிகர்களுக்கு ரூ.41 ஆயிரம் அபராதம் + "||" + Food traders using banned plastic products

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய உணவு வணிகர்களுக்கு ரூ.41 ஆயிரம் அபராதம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய உணவு வணிகர்களுக்கு ரூ.41 ஆயிரம் அபராதம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய உணவு வணிகர்களுக்கு ரூ.41 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான வழி நடத்துதல் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் வரலட்சுமி, முதன்மைக்கல்வி அலுவலர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் பேசியதாவது:-

அரசு மற்றும் தனியாக உணவு வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் உணவுப்பாதுகாப்பு தரங்கள் சட்டப்படி பதிவு, உரிமம் பெற்று உணவு வணிகம் மேற்கொள்ள வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது நோட்டீஸ் அளித்து அபராதம் விதிக்கப்படும். தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் உணவு பார்சல் மற்றும் உணவு பரிமாறுதல், சுகாதாரம் தொடர்பான விதிகளை மீறுவது போன்ற செயல்களுக்கு உடனே அபராதம் விதிக்கப்படும்.

ரூ.41 ஆயிரம் அபராதம்

நாகை மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய உணவு வணிகர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.41 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவு வணிகர்கள் கட்டாயம் உணவு பாதுகாப்பு துறையின கீழ் உரிமம், பதிவு பெற்று விதிகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி, நுகர்வோர் அமைப்பு உறுப்பினர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஓட்டல் உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜார்க்கண்டில் முககவசம் அணியாதவருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம்
ஜார்க்கண்டில் முககவசம் அணியாதவருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
2. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
அரியலூர் மாவட்டம், முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாவட்ட கலெக்டர் ரத்னா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3. கடத்தூர் பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற 29 பேருக்கு அபராதம்
கடத்தூர் பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற 29 பேருக்கு அபராதம் பேரூராட்சி அலுவலர்கள் நடவடிக்கை.
4. முககவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
முககவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்.
5. திருச்சியில் முக கவசம் அணியாத அரசு பஸ் கண்டக்டர், மருத்துவ கல்லூரி ஊழியருக்கு அபராதம்
திருச்சியில் முக கவசம் அணியாத அரசு பஸ் கண்டக்டர், மருத்துவ கல்லூரி ஊழியர் உள்ளிட்டோருக்கு மாநகராட்சி குழுவினர் அபராதம் விதித்தனர்.