குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் திருமாவளவன் எம்.பி. பேச்சு
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று கடலூரில் நடந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து திருமாவளவன் எம்.பி. கூறினார்.
கடலூர்,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் இந்த கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று நடந்தது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தலைமை தாங்கி கையெழுத்திட்டு, தொடங்கி வைத்தார். கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-
பொருளாதாரத்தில் வீழ்ச்சி
மோடி அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. பொருளாதாரத்தில் நாடு கடுமையான வீழ்ச்சி அடைந்த நிலையில் அதை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இதை பற்றி கவலைப்படாமல், மத ரீதியான உணர்ச்சியை மத்திய அரசு தூண்டி வருகிறது.
மதத்தை அளவுகோலாக கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை இயற்றி இருக்கிற ஒரே நாடு இந்தியா தான். சட்ட விரோதமாக குடியேறி இருந்தாலும் இந்துக்கள், பவுத்தர்கள், பார்சீயர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்களாக இருந்தால் குடியுரிமை கொடுப்போம் என்கிறார்கள். முஸ்லிம்களை அதில் சேர்க்கவில்லை. முஸ்லிம்களாக இருந்தால் கொடுக்க மாட்டோம் என்று சட்டத்தில் சொல்லவில்லை.
பா.ம.க., அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஓட்டுகளால்...
ஆனால் முஸ்லிம்களை அதில் ஏன் சேர்க்கவில்லை?. முஸ்லிம்களை திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு தவிர்ப்பது ஏன்? இது தான் எங்கள் கேள்வி. மக்களவையில் இந்த சட்டம் நிறைவேறி இருந்தால் பிரச்சினை இல்லை. மாநிலங்களவையில் பாரதீய ஜனதா கட்சிக்கு போதிய பெரும்பான்மை இல்லை. ஆனால் பா.ம.க., அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஓட்டு போட்டதால் தான் மாநிலங்களவையில் இந்த சட்டம் நிறைவேறி உள்ளது.
இன்று நாடு முழுவதும் கொந்தளிப்புக்கு காரணம் அ.தி.மு.க.வும். பா.ம.க.வும் தான். இவர்கள் போட்ட ஓட்டினால்தான் இந்த சட்டம் நிறைவேறி இருக்கிறது. ஆனால் ஈழ தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவோம் என்று நாடகம் ஆடுகிறார்கள். இதை திரும்ப பெற்றுக்கொண்டு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு திருமாவளவன் எம்.பி. பேசினார்.
இதில் துரை.கி. சரவணன் எம்.எல்.ஏ., தி.க. பொதுச்செயலாளர் சந்திரசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக்குழு மணிவாசகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், நகர தலைவர் வேலுசாமி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மனித நேய மக்கள் கட்சி ஷேக்தாவூத், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், நிர்வாகக்குழு கண்ணன், தி.மு.க. நகர செயலாளர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, வி.ஆர்.அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், நகர இளைஞரணி பிரசன்னா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story