கள்ளக்குறிச்சி, தியாகதுருகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கையெழுத்து இயக்கம்


கள்ளக்குறிச்சி, தியாகதுருகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 3 Feb 2020 4:30 AM IST (Updated: 3 Feb 2020 2:25 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி, தியாக துருகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கென்னடி, நகர செயலாளர் சுப்புராயலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், அரவிந்தன், நகர துணைசெயலாளர் அபுபக்கர், கொளஞ்சியப்பன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தியாகதுருகம்

இதேபோல் தியாகதுருகம் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சிக்கு தி.மு.க. நகர செயலாளர் பொன்.ராமகிரு‌‌ஷ்ணன் தலைமை தாங்கினார். மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன், தியாகதுருகம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் திம்மலை நெடுஞ்செழியன், மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் முரசொலிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி பெரியசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ரி‌ஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பஸ்நிலையம், கடைவீதி பகுதி கடைகள், ஆட்டோ ஓட்டுனர்கள், பயணிகளிடம் தி.மு.க.வினர் கையெழுத்து வாங்கினர். இதேபோல் ஒன்றிய கிராமங்களிலும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் ஒன்றிய துணைசெயலாளர்கள் அண்ணாதுரை, சாந்திகணேசன், மாவட்ட பிரதிநிதிகள் எத்திராசு, நெடுஞ்செழியன், நகர இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன், துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி சசிகுமார், நிர்வாகிகள் மூர்த்தி, கோபால், கணேசன், ராஜா, சிவகுமார், சீனு, அமுதாஜோதி, செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story