மாவட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிட கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம்


மாவட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிட கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 2 Feb 2020 11:00 PM GMT (Updated: 2 Feb 2020 9:39 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிட கோரி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

எலச்சிபாளையம்,

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவை தயாரிப்பதை கைவிட வலியுறுத்தி நேற்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி காந்திசெல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் விமலா சிவக்குமார், நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த், காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குழந்தான், ம.தி.மு.க. சார்பில் பழனிசாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் முத்துராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு நகர தி.மு.க. சார்பில் நடந்த கையெழுத்து இயக்கத்தை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பரமத்தி எம்.எல்.ஏ.வுமான கே.எஸ்.மூர்த்தி கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார். இதையடுத்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற முதல் நோட்டு புத்தகத்தை கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் திருச்செங்கோடு நகர செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜிதேந்திரன், தலைமை கழக பேச்சாளர் முரசொலி முத்து, மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் பொன்னுசாமி, நகர காங்கிரஸ் தலைவர் செல்வகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போட்டனர்.

சேந்தமங்கலம்

பள்ளிபாளையம் நகர தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் பஸ்நிலைய ரோட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் நகர தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் குமார் ஆகியார் கையெழுத்து போட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தனர். இதில் நகர அவைத்தலைவர் ஜான், தொண்டரணி அமைப்பாளர் சண்முகம் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டு கையெழுத்து போட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

இதேபோல சேந்தமங்கலம் ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்த கையெழுத்து இயக்கத்தை ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் சம்பத், சேந்தமங்கலம் பேரூர் செயலாளர் தனபாலன், காளப்பநாயக்கன்பட்டி பேரூர் செயலாளர் நடேசன், ஒன்றியக்குழு தலைவர் மணிமாலா சின்னுசாமி உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு கையெழுத்து போட்டனர். மேலும் அங்கிருந்த பொதுமக்களிடமும் கையெழுத்து வாங்கினர்.

ராசிபுரம்

ராசிபுரம் பழைய பஸ்நிலையம் அருகே தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தினர். நகர தி.மு.க. செயலாளர் சங்கர் தலைமை தாங்கி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலு, மாவட்ட பிரதிநிதி அரங்கசாமி, தி.மு.க. அவைத்தலைவர் அமிர்தலிங்கம், துணை செயலாளர்கள் ரவிச்சந்திரன், ஆனந்தன், நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமுலு முரளி, மதிமுக. நகர செயலாளர் ஜோதிபாசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ஆதவன், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் மணிமாறன். மற்றும் ராஜாமுகமது, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கந்தம்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த கையெழுத்து இயக்கத்தை கொங்குநாடு மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பூபதி, ஒன்றிய தலைவர் பழனியப்பன், பரமத்தி தி.மு.க. ஒன்றிய செயலாளர் தனராசு, ஒன்றிய கவுன்சிலர் துரைசாமி, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் கையெழுத்து போட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.


Next Story